ETV Bharat / business

விற்காத கட்டில்களை வச்சிக்கிட்டு எப்படி சமாளிக்க போறோம்னு தெரியல?: புலம்பும் கட்டில் பின்னுபவர்கள்! - அரசின் உதவி கோரும் கட்டில் பின்னும் தொழிலாளிகள்

இரண்டு மாதமாக விற்பனை செய்ய முடியாமல் நூல் கட்டில்கள் தேக்கமடைந்துள்ளன. இது எங்களுக்கு 2 வருட பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். இதிலிருந்து எங்களை மீட்டெடுக்க நல வாரியங்கள் கூட இல்லை என்கிறார்கள் கட்டில் பின்னும் தொழிலாளிகள் தோய்ந்த குரலில் ...

கட்டில் பின்னுபவர்
கட்டில் பின்னுபவர்
author img

By

Published : May 28, 2020, 5:31 PM IST

Updated : May 29, 2020, 2:34 PM IST

கோடைக்காலங்களில் வழியும் வியர்வைத் துளிகளினூடே நிம்மதியாகத் தூங்குவது நடுத்தர மக்களுக்கு பெரிய சவாலாகவேயிருக்கும். அந்த சவாலை எளிதில் கையாள உதவும் அதிய கட்டில் என்றே நூல் கட்டிலைச் சொல்லலாம். நூல்கட்டிகளின் நெகிழும் தன்மை வெப்பத்தைக் குறைத்து தூக்கத்தை வரவழைக்கும். அது சிறு வயதில் தூங்கிய சேலைத் தொட்டில்களையும்கூட நினைவுபடுத்தும்.

இந்த கட்டில்கள் வேம்பு, வாகை, மூங்கில் போன்ற மரங்களை பயன்படுத்தி மரச்சட்டங்கள் செய்யப்படுகின்றன. இக்கட்டில்கள் 6 அடி நீளமும், மூன்றரை அடி அகலமும் கொண்டவை. இப்போதைய காலக்கட்டத்தில் உருளை வடிவ இரும்புக்கம்பிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

நூல் கட்டில்
நூல் கட்டில்

கரூர் மாவட்டத்தில் தாந்தோணிமலை பகுதியில் 300 -க்கும் மேற்பட்டோர் நூல் கட்டில் பின்னும் தொழிலை நம்பியுள்ளனர். இவர்கள் வேம்பு, வாகை, மூங்கில் போன்ற மரங்களைப் பயன்படுத்தி 6 அடி நீளம் மூன்றரை அடி அகலத்திற்கு கட்டில்களை பின்னிக் கொடுக்கின்றனர். நாமக்கல், சேலம், பெரம்பலூர், பன்ருட்டி, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களுக்கு சென்று நூல்கட்டில்களை பின்னி விற்கும் இவர்களுக்கு, ஊரடங்கில் விதிக்கப்பட்ட பயணத்தடை பேரிடியாக இருந்தது. பல வருடங்களாக நூல் கட்டில் தொழிலை பிரதானமாக செய்து வந்ததால் வேறு தொழிலுக்கும் செல்ல முடியவில்லை என அத்தொழிலாளிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

நூல் கட்டில்
நூல் கட்டில்

இது குறித்து கட்டில் பின்னும் தொழிலாளி சேட், ”எங்களுடைய பகுதியில் 200 -க்கும் மேற்பட்டோர் கட்டில் பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ளோம். இந்த வருடம் தொடங்கியதிலிருந்து சரியான வேலைவாய்ப்பு இல்லை. சீசனை நம்பியிருந்தோம், ஊரடங்கு வந்துவிட்டது. பலரிடம் உதவி கோரியும் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. வருடத்திற்கு நான்கு மாதங்கள்தான் வேலை சூடுபிடிக்கும். தற்போது சீசன் இருந்தும் விற்பனை செய்யமுடியாத சூழல் உருவாகியுள்ளது” என்றார்.

நூல் கட்டில் பின்னும் தொழிலாளர்கள் சந்திக்கும் நெருக்கடி குறித்த காணொலி

கட்டில் பின்னும் தொழிலாளி பரணிதரன், “நூல் கட்டில்கள் பங்குனி, சித்திரை மாதங்களில்தான் அதிகம் விற்கும். ஆனால் தற்போது பிறப்பித்துள்ள ஊரடங்கு விற்பனையை ஒத்தி வைத்தது. இரண்டு மாத காலம் விற்பனை செய்யமுடியாததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு 2 வருட பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கட்டில்கள் விற்ற பணத்தில் கடன்களை அடைக்கலாம் என்றிந்தோம். அதற்கும் வழியில்லாமல் போனது. சுய உதவிக் குழுக்களில் உள்ள கடன்களை கட்ட கால அவகாசம் நீட்டித்தால் நன்றாகயிருக்கும். அரசு எங்களின் இக்கட்டான சூழலை புரிந்து கொண்டு உதவினால் பிழைத்துக் கொள்வோம்” என்றார்.

இதையும் படிங்க: பின்னடைவை சந்திக்கும் அச்சு தொழில் - மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் கிடைப்பதில் சிக்கல்..!

Last Updated : May 29, 2020, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.