இந்தியாவில் வேலைவாய்ப்புச் சந்தை தொடர்பான முக்கிய ஆய்வுத் தகவலை லிங்கிடுஇன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டின் வேலைவாய்ப்புச் சந்தையில் போட்டியானது 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 30 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக சுற்றுலா, சில்லறை வியாபாரம், கார்ப்பரேட் சேவை உள்ளிட்ட துறைகளில் வேலை செய்பவர்கள் வேறுதுறைகளில் பணியாற்ற விரும்புகிறார்கள் என ஆய்வு தெரிவிக்கிறது.
அதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் நாட்டில் வேலைவாய்ப்புகள் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.
சென்றக் காலண்டைக் காட்டிலும் நடப்புக்காலாண்டில் புதிய வேலைக்கான எண்ணிக்கை 12 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: நிமிடத்துக்கு 3 நபர்களுக்கு வேலையளிக்கும் லிங்க்ட்-இன்: சத்ய நாதெல்லா