ETV Bharat / business

வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு - இன்றைய சிலிண்டர் விலை என்ன

வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.105 உயர்ந்து, ரூ.2,145க்கு விற்பனை செய்யப்படுகிறது.

commercial-lpg-cylinder-prices-increased-by-rs-105

author img

By

Published : Mar 1, 2022, 9:00 AM IST

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை மாற்றம் செய்யப்படுகின்றன.

அந்த வகையில் மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து, ரூ.2,145க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 5 கிலோ சிலிண்டர் விலையும் ரூ.27 அதிகரித்துள்ளது. அதன்படி டெல்லியில் 5 கிலோ சிலிண்டர் விலை ரூ.569ஆக உள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த விலையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதையும் படிங்க: நாளொன்றுக்கு 100 டன் இயற்கை உரம் தயாரிக்கும் ஆலையை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.