நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் போல சமையல் எரிவாயு விலை உயர்வும் பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
அதன்படி, அறிவிப்பில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.91.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று முதல் (பிப். 1) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.1,907ஆக குறைந்துள்ளது.
ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் வணிக சிலிண்டர் விலை 102.50 ரூபாய் குறைக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது. அதேவேளை, வீட்டுப் பயன்பாட்டிற்கான 14.2 கிலோ, 10 கிலோ, ஐந்து கிலோ எரிவாயு சிலிண்டர்களில் தற்போது விலை குறைப்பு அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
அதே போல் நாட்டின் பெட்ரோல், டீசல் விலையிலும் 89 நாள்களாக மாற்றம் இல்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: Budget 2022: காவிரி - பெண்ணாறு இணைப்பு திட்டம் அறிவிப்பு