கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில், மாபெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொருளாதார பாதிப்பை சரி செய்ய, 20 லட்சம் கோடி ரூபாய், பொருளாதார மீட்புத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்
அதனை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மூன்று நாள்களாக பல திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது அறிவிப்பில் தேனீ வளர்ப்பு திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து முன்னாள் மத்திய நிதி அமைச்சரான சிதம்பரம், நிர்மலா சித்தராமனிடம் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் 2020-2021 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போதே தேனீ வளர்ப்பு திட்டத்தின் கீழ் 2,400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளீர்கள்.
அவ்வாறு இருக்க தற்போது ஏன் மீண்டும் தேனீ வளர்ப்பிற்கு நிதி ஒதுக்க வேண்டும் எனவும் இந்த திட்டம் எனக்கு புரியாத ஒன்றாக இருப்பதால் கொஞ்சம் தெளிவாக விளக்கி சொல்லுங்கள் என சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: 'யார் தான் கடன் கொடுத்தது? முதலில் நீங்கள் பேசி முடிவெடுங்கள்' - ப.சிதம்பரம் கலாய்