ETV Bharat / business

சீனப் பொருள்களை புறக்கணிப்போம் - வர்த்தக் கூட்டமைப்பு போர்க்கொடி

டெல்லி: இந்தியா - சீனா இடையே மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், சீனாவின் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு போர்க்கொடித் தூக்கியுள்ளது.

CAIT
CAIT
author img

By

Published : Jun 17, 2020, 12:13 PM IST

இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் இரு நாட்டு ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் 20-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பவரும் வீர மரணமடைந்தார்.

இரு நாடுகளுக்குமிடையே மோதல் போக்கு நிலவிவரும் இந்தச் சூழலில் வர்த்தக ரீதியாகச் சீனாவைப் புறக்கணிக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போதைய சூழலில் 500-க்கும் மேற்பட்ட பிரிவுகளின்கீழ் உள்ள மூன்றாயிரம் பொருள்களை உற்பத்திச் செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது. ஆனால் மலிவாகக் கிடைக்கிறதே என்ற ஆசையில் அதை நாம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்துவருகிறோம்.

தற்போதையச் சூழலில் ஆண்டிற்கு ரூ.5.25 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்களை இந்தியா சீனாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. அடுத்தாண்டு இறுதிக்குள் இந்த இறக்குமதியை ரூ. 1 லட்சம் கோடி அளவிற்கு குறைக்க வேண்டும்.

மேலும், இறக்குமதி செய்யும் பொருள்களை இந்தியாவே உற்பத்திசெய்யும் திறன்கொண்டுள்ளது. எனவே அதை ஊக்குவிக்கும் வழிவகையை அரசு கண்டறிய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் சீனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.