பெங்களூரு (கர்நாடகம்): அமெரிக்க நிறுவனமான சி4யு, நான்காயிரம் கோடி ருபாய் முதலீட்டில் புதிய லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பு ஆலையை மாநிலத்தில் நிறுவ உள்ளதாக ஒன்றிய தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அமைச்சர், "சி4வி நூற்றுக்கும் மேற்பட்ட காப்புரிமைகள், லித்தியம் பேட்டரி செல் உற்பத்தியில் மேம்பட்ட தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்ட உலகின் முன்னணி நிறுவனம் ஆகும். 5 ஜிகாவாட் மணிநேர திறன் கொண்ட ஆலை இங்கு நிறுவப்படவுள்ளது.
இதற்காக நான்காயிரத்து 15 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது. இதன்மூலம் நான்காயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அடுத்த ஆண்டிற்குள் ஆலையின் கட்டுமான வேலைகள் முழுவதும் முடிக்கப்பட்டு, பேட்டரி தயாரிப்பு பணிகள் தொடங்கப்படும்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சூழல் சார்ந்த மின் உற்பத்தி மற்றும் சேமிப்புத் துறைகள் இந்தியாவில் ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும், இதன்மூலம் அத்துறை பெரும் வளர்ச்சி கண்டு வருவதாகவும் தெரிவித்தார்.