டெல்லி : பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமொட்டோ பங்குகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) அறிமுகமாகின.
மும்பை பங்குச் சந்தையில் ரூ.76க்கு அறிமுகமான சொமொட்டோ பங்குககள் 51.31 சதவீதம் உயர்ந்து ரூ.115க்கு விற்பனையாகின. அதேபோல் தேசிய பங்குச் சந்தையிலும் 52.63 புள்ளிகள் உயர்ந்து ரூ.138 ஆக விற்பனையாகின.
சொமொட்டோ நிறுவனத்தின் முதல் பங்கு வெளியீடு ஜூலை 14ஆம் தேதி வெளியானது. அப்போது ஒரு பங்கின் விலை 72-76 வரை ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பம்பர் ஆஃபராக சொமொட்டோ பங்குகள் பெரும் விலை உயர்வை சந்தித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : 'அந்த மனசுதான் சார்' - டெலிவரி பாய்க்கு 'பைக்' வாங்கிக் கொடுத்த வாடிக்கையாளர்