டெல்லி: 27 வகை பூச்சிக் கொல்லிகளைத் தடை செய்வதென்பது பிரதமர் நரேந்திர மோடியின் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை சிதைத்துவிடும் என இந்தியப் பயிர் பராமரிப்பு கூட்டமைப்பான சி.சி.எஃப்.ஐ. தெரிவித்துள்ளது.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் பல வகை பூச்சிக்கொல்லிகளைப் பல நாடுகளில் நெடுங்காலத்துக்கு முன்பே தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இன்றளவும் விவசாயிகள் பயன்படுத்திவருகின்றனர்.
இவற்றில் 27 வகை பூச்சிக்கொல்லிகளைத் தடைசெய்வதற்கான வரைவை வேளாண்மை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது குறித்த எதிர்ப்புகள், கருத்துருக்கள் ஆகியவை 45 நாள்களுக்குள் பரிசீலித்த பின் இறுதி உத்தரவு ஜூலை மாதம் பிறப்பிக்கப்படும்.
அசிப்பேட், அட்ராசின், பென்பியூராகார்ப், கப்டான், டையூரான், மாலத்தியான், சைனீப், சீரம் ஆகியவை தடைசெய்யப்படவுள்ள பூச்சிக்கொல்லிகளில் அடங்கும். இறுதி உத்தரவு வந்தபின் இவற்றைத் தயாரிக்க, இறக்குமதி செய்ய, விற்க, கொண்டுசெல்ல, வழங்க, பயன்படுத்த அனுமதிக்கப்படாது.
தக்காளி கிலோ ரூ.3 முதல் விற்பனை - கவலையில் விவசாயிகள்