ETV Bharat / business

8 லட்சம் பலேனோ கார்களை விற்றுத்தீர்த்த மாருதி சுசூகி!

மாருதி சுசூகி இந்தியா, தனது பிரீமியம் ஹேட்ச்பேக் காரானா ‘பலேனோ’, 8 லட்சம் யூனிட்டுகளை விற்பனை செய்து மைல்கல்லை எட்டியுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் இந்தக் கார் பயனர் சாலைகளில் பயணிக்கத் தொடங்கியது.

author img

By

Published : Oct 26, 2020, 6:22 PM IST

Maruti Suzuki Baleno
மாருதி சுசூகி பலேனோ

டெல்லி: இந்தியாவில் பெரும் சிறிய ரக வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, தனது பலேனோ கார்களின் எட்டு லட்சம் யூனிட்டுகளை இதுவரையில் விற்றுள்ளது.

2015ஆம் ஆண்டு பயனர் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆடம்பர வாகனம், போட்டி மிகுந்த சந்தையில், புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தப் பிரீமியம் வாகனம் 59 மாதங்களில் இந்தச் சாதனையை விற்பனையில் நிகழ்த்தியுள்ளது.

இந்தியாவில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட இந்த ரக கார்கள் 200 நகரங்களில் உள்ள 377 நெக்ஸா விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இது ஆஸ்திரேலியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா போன்ற பல வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதன் புதிய பதிப்பு பிஎஸ்-6 உடன் 1.2 பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. ஸ்மார்ட் ஹைபிரிட் தொழில்நுட்பம் இதன் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.