தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”நாடு முழுவதும் கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக வாடிக்கையாளர்கள் சந்தித்துவரும் இடர்களை உணர்கிறோம்.
பல வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் வாகன சர்வீஸ் செய்ய முடியாமல் போகக்கூடும். எனவே ஏப்ரல், மே மாதங்களில் 'வேலிடிட்டி' முடிவுக்கு வரும் வாடிக்கையாளர்களின் 'ஃப்ரீ சர்வீஸ்' காலத்தையும், வாரண்டி காலத்தையும் வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளோம். இந்த நீட்டிப்பானது அனைத்து டீலர்களுக்கு, அனைத்து ரக இரண்டு, நான்கு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தது ஸ்புட்னிக் வி தடுப்பூசி