ETV Bharat / business

நொடிகளில் சார்ஜ் ஏறும் மின்சார பேருந்து - அஷோக் லேலாண்ட் தயாரிக்கிறது! - மின்சார பேருந்து

சென்னை: விரைவாக சார்ஜ் ஏறும் மின்சாரப் பேருந்தை தயாரிப்பதற்காக அஷோக் லேலாண்ட் நிறுவனம், ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏபிபி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

bus
bus
author img

By

Published : Jan 11, 2020, 7:08 PM IST

மின்சாரப் பேருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அஷோக் லேலாண்ட் நிறுவனம், உயர் தொழில்நுட்பத்தில் பேருந்து தயாரிப்பதற்காக, மின்சார வாகன தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனமான ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏபிபி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. தற்போதுள்ள மின்சாரப் பேருந்துகள் குறைந்த தூரம் செல்லக்கூடியதாக உள்ளதோடு, சார்ஜ் செய்ய நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. இந்நிலையில், ஏபிபி நிறுவனத்தின் டோஸா (TOSA) என்ற அதிவிரைவு சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவில் புதிய பேருந்துகளை தயாரிக்க உள்ளது அஷோக் லேலாண்ட்.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், வழித்தடத்தில் உள்ள பேருந்து நிறுத்தங்களில், குறிப்பிட்ட இடங்களில் பேருந்தின் தலைக்கு மேல் சார்ஜிங் வசதி பொறுத்தப்படும். நிறுத்தத்தில் பேருந்து நிற்கும் சில நொடிகளில், சார்ஜ் ஏறிவிடும். இதற்கு சரியாக 15 நொடிகள் மட்டுமே எடுக்குமெனக் கூறப்படுகிறது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தங்களில் இந்த சார்ஜிங் வசதி பொறுத்தப்பட்டால், பயணிகள் ஏறி, இறங்கும் நேரத்திற்குள் பேருந்துக்கு சார்ஜ் கிடைத்துவிடும். இதன்மூலம், 15 நொடிகளில் 600 கிலோ வாட் அளவுக்கு சார்ஜ் ஏறும் என ஏபிபி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பேருந்து நிலையத்திலும் கூடுதல் நேரம் சார்ஜ் செய்ய முடியும் என்பதால் நீண்ட தூரத்திற்கு, அதிக பயணிகளுடன் தடையில்லாமல் மின்சார வாகனங்களை இயக்க முடியும். தற்போதுள்ள பேட்டரியை மாற்றி பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைவிட குறுகிய இடைவேளைகளில் பேருந்து சேவை வழங்க முடியும்.

15 நொடிகளில் 600 கிலோ வாட் அளவுக்கு சார்ஜ் ஏறும் - ஏபிபி நிறுவனம்

சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, பொதுப் போக்குவரத்து முறையை ஊக்குவிக்கும் வகையிலும், சர்வசேத சந்தையில் உள்ள போட்டியை சமாளிக்கும் விதமாகவும் டோஸா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக அஷோக் லேலாண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் சூழல் மாசை குறைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள மக்கள், மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். மின்சார வாகனங்களே எதிர்கால போக்குவரத்து முறையாக நிலைக்கப்போகிறது என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் தற்போதுள்ள மின்சார வாகன தொழில்நுட்பம் தொடக்க நிலையிலேயே உள்ளது. குறிப்பாக இந்தியாவில் மிகச் சிறிய அளவிலேயே உள்ளது.

குறிப்பிட்ட இடங்களில் பேருந்தின் தலைக்கு மேல் சார்ஜிங் வசதி பொறுத்தப்படும்

மின்சார வாகனத்தில் குறைந்த தூரத்திற்கு மட்டுமே செல்லும் நிலை உள்ளது. பெட்ரோல், டீசல் பங்குகளை போல் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய போதிய மின்னேற்று நிலையங்கள் அமைக்கப்படவில்லை. மேலும், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய பல மணி நேரம் தேவைப்படுகிறது. இதனால் ஏராளமான மக்கள், இதனை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.

மத்திய, மாநில அரசுகளும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன. தமிழக அரசு மின்சார வாகன உற்பத்திக் கொள்கையையும், மின்சார வாகன மின்னேற்று நிலையங்கள் அமைப்பதற்கான உள்கட்டுமான திட்டங்களையும் வெளியிட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் தியேட்டர்கள், பூங்காக்கள், மால்கள், பொழுதுபோக்கு இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கு மின்னேற்று நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் பொது போக்குவரத்தில் அதிக அளவு மின்சாரப் பேருந்துகளை பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை உள்பட தமிழகம் முழுவதிலும் 525 மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்து, சோதனை ஓட்டமாக சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை ஒரு மின்சார பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்தையும் அஷோக் லேலாண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது.

’சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை ஓடும் மின்சாரப் பேருந்து’

தற்போது அஷோக் லேலாண்ட், பரிசோதனை முறையில் அதிவிரைவாக சார்ஜ் ஏறும் மின்சாரப் பேருந்து உற்பத்தியில் இறங்கியுள்ளது. அதிவிரைவு சார்ஜிங் வசதி நிஜமானால் விரைவில் வீதிகளில் மின்சார வாகனங்கள் படையெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிங்க: மீண்டும் புத்துயிர் பெறும் ’மெட்ராஸ் பங்கு சந்தை’

Intro:Body:
நொடிகளில் சார்ஜ் ஏறும் மின்சார பேருந்து... ஏபிபி நிறுவனத்துடன் அஷேக் லேலாண்ட் கூட்டணி

சென்னை: விரைவில் சார்ஜ் ஏறும் மின்சார பேருந்தை தயாரிப்பதற்காக அஷோக் லேலாண்ட் நிறுவனம், ஸ்விச்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏபிபி நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

மின்சார பேருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அஷோக் லேலாண்ட் நிறுவனம், உயர் தொழில்நுட்பத்தில் பேருந்து தயாரிப்பதற்காக, மின்சார வாகன தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி உள்ள நிறுவனங்களில் ஒன்றான ஸ்விச்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏபிபி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. தற்போதுள்ள மின்சார பேருந்துகள் குறைந்த தூரம் செல்லக்கூடியதாக உள்ளதோடு, சார்ஜ் செய்ய நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. இந்த நிலையில் ஏபிபி நிறுவனத்தின் டோஸா (TOSA) என்ற அதிவிரைவு சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவில் புதிய பேருந்துகளை தயாரிக்க உள்ளது அஷோக் லேலாண்ட்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம், வழித்தடத்தில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் குறிப்பிட்ட இடங்களில் பேருந்தின் தலைக்கு மேல் சார்ஜிங் வசதி பொறுத்தப்படும். நிறுத்தத்தில் பேருந்து நிற்கும் சில நொடிகளில், சார்ஜ் ஏறிவிடும். இதற்கு சரியாக 15 நொடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தங்களில் இந்த சார்ஜிங் வசதி பொறுத்தப்பட்டால் பயணிகள் ஏறி, இறங்கும் நேரத்திற்குள் பேருந்துக்கு சார்ஜ் கிடைத்துவிடும். இதன்மூலம் 15 நொடிகளில் 600 கிலோ வாட் அளவுக்கு சார்ஜ் ஏறும் என ஏபிபி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பேருந்து நிலையத்திலும் கூடுதல் நேரம் சார்ஜ் செய்ய முடியும் என்பதால் நீண்ட தூரத்துக்கு, அதிக பயணிகளுடன் தடையில்லாமல் மின்சார வாகனங்களை இயக்க முடியும். தற்போதுள்ள பேட்டரியை மாற்றி பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைவிட குறுகிய இடைவேளைகளில் பேருந்து சேவை வழங்க முடியும்.

சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, பொது போக்குவரத்து முறையை ஊக்குவிக்கும் வகையிலும், சர்வசேத சந்தையில் உள்ள போட்டியை சமாளிக்கும் விதமாகவும் டோஸா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக அஷோக் லேலாண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் சூழல் மாசை குறைக்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். மின்சார வாகனங்களே எதிர்கால போக்குவரத்து முறையாக நிலைக்கப்போகிறது என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் தற்போதுள்ள மின்சார வாகன தொழில்நுட்பம் தொடக்க நிலையிலே உள்ளது. குறிப்பாக இந்தியாவில் மிக சிறிய அளவிலேயே உள்ளது.

மின்சார வாகனத்தில் குறைந்த தூரத்துக்கு மட்டுமே செல்லும் நிலை உள்ளது. பெட்ரோல், டீசல் பங்குகளை போல் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய போதிய மின்னேற்று நிலையங்கள் அமைக்கப்படவில்லை. மேலும், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய பல மணி நேரம் தேவைப்படுகிறது. இதனால் ஏராளமான மக்கள் இதனை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.

மத்திய, மாநில அரசுகளும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் வகுத்து வருகின்றன. தமிழக அரசு மின்சார வாகன உற்பத்திக் கொள்கையையும், மின்சார வாகன மின்னேற்று நிலையங்கள் அமைப்பதற்கான உள்கட்டுமான திட்டங்களையும் வெளியிட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் தியேட்டர்கள், பூங்காக்கள், மால்கள், பொழுதுபோக்கு இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கு மின்னேற்று நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல் பொதுபோக்குவரத்தில் அதிக அளவு மின்சார பேருந்துகளை பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை உள்பட்ட தமிழகம் முழுவதிலும் 525 மின்சார பேருந்துகளையும் இயக்க தமிழக அரசு முடிவு செய்து, சோதனை ஓட்டமாக சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை ஒரு மின்சார பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தையும் அஷோக் லேலாண்ட் நிறுவனமே உற்பத்தி செய்தது. தற்போது அஷோக் லேலாண்ட் பரிசோதனை முறையில் அதிவிரைவாக சார்ஜ் ஏறும் மின்சார பேருந்து உற்பத்தியில் இறங்கியுள்ளது. அதிவிரைவு சார்ஜிங் வசதி நிஜமானால் விரைவில் வீதிகளில் மின்சார வாகனங்கள் படையெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

டோஸா தொழில்நுட்பம் மாதிரி வீடியோ

https://www.youtube.com/watch?v=bvWslLGpNDU&feature=youtu.beConclusion:more visual in mojo
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.