தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா 2019 தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு முன், ஆன்லைன் நிறுவனங்களின் இந்தியப் பிரதிநிதிகள் அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் நேரில ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி ட்விட்டர், அமேசான் நிறுவனங்கள் வரும் அக்டோபர் 28ஆம் தேதியும், பேடிஎம் மற்றும் கூகுள் நிறுவனங்கள் மறுநாளான அக்டோபர் 29ஆம் தேதியும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனிநபர் மற்றும் தரவுகள் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு நேரில் ஆஜராக அமேசான் நிறுவனம் மறுத்துள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்பியுமான மீனாட்சி லேக்கி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக அரசு கட்டாய நடவடிக்கை எடுக்க முடியும் என்ற முடிவில் விசாரணைக் குழு தெளிவாக உள்ளது.
அக்டோபர் 28ஆம் தேதி அமேசான் பிரதிநிதிகள் விசாரணைக்கு குழு முன் ஆஜராக மறுத்துவிட்டனர். இ-காமர்ஸ் நிறுவனத்தின் சார்பாக யாரும் குழுவின் முன் தோன்றவில்லை என்றால் அது உரிமை மீறலாகக் கருதப்படும்" என்றார்.
இதற்கிடையில், பேஸ்புக்கின் இந்தியப் பிரிவு தலைவர் அங்கி தாஸ் இன்று (அக்.23) தனிநபர் மற்றும் தரவுகள் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு ஆஜரானார்.
இதையும் படிங்க: போலி ஆதார் அட்டைகள் அச்சடித்து விநியோகித்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி பிரமுகர் கைது!