கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி பத்து பொதுத் துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைக்கும் அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பொதுத் துறை வங்கிகளின் நிதிச்சுமை, வாராக்கடன் பிரச்னை, நிர்வாகச் சிக்கல் ஆகியவற்றை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் சார்பில் கடும் கண்டனம் எழுப்பப்பட்டது. இந்நிலையில், தற்போது அலகாபாத் வங்கியின் இயக்குநர் குழு இந்தியன் வங்கியுடன் இணைய ஒப்புதல் அளித்துள்ளது.
செபி எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் அமைப்பின் விதிகளுக்குள்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த முடிவு சட்டத்திற்குப் புறம்பானது என ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: