ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து துபாய்க்கு, கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணி ஒருவருக்கு கரோனா பாதிப்புக்குள்ளான விவகாரம் ஏர் இந்தியா நிறுவனத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டிற்கு வருகை தரும் பயணிகள் முன்னதாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பு இல்லை என்ற மருத்துவ சான்றை வழங்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில், அப்பயணி துபாயில் தரையிறங்கியதும் அவர் பரிசோதனை மேற்கொண்டதில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கவனக் குறைவுடன் செயல்பட்டு விதிமுறைகளை மீறியதால், அந்த நிறுவன பயணிகள் விமானம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வரை துபாய் வர அந்நாட்டு விமான போக்குவரத்து துறை ஆணையம் தடை விதித்துள்ளது.
இவ்விவகரத்தில் தொடர்புடைய நபர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஏர் இந்தியா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விதிமுறைகள் மீறிய விவகாரம் தொடர்பாக ஹாங்காங் அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ஏர் இந்தியா நிறுவனத்திற்குத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பின்னலாடை துறையில் சீனாவை வெல்ல என்ன செய்ய வேண்டும்?