ஜப்பானைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான நிசான் வாகன விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் முதல் நிசான்-டட்சன் நிறுவனத்தின் கார்கள் விலை உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வானது நிசான் மற்றும் டட்சன் நிறுவனத்தின் அனைத்துவகை மாடல்களுக்கும் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து கருத்துத் தெரிவித்த நிசான் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவத்சவா, “தற்போதைய சந்தை சூழலில் வாகன உற்பத்திக்கான உபகரணங்கள், உள்ளீட்டுப் பொருள்கள் விலை உயர்வு காரணமாகவே இந்த விலை உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
ஏற்கனவே, நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அதைத் தொடர்ந்து நிசான் நிறுவனமும் தற்போது இந்த நடவடிக்கையைத் தற்போது மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74%: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்