ETV Bharat / business

கொரோனாவை இந்திய சந்தை சமாளிக்கும் - வர்த்தக கூட்டமைப்பு நம்பிக்கை - கொரோனா இந்திய சீனா வர்த்தகம்

டெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள தற்காலிக சிக்கலை இந்திய தொழிற்துறை சமாளிக்கும் என வர்த்தக கூட்டமைப்பான அசோச்சம் தெரிவித்துள்ளது.

அசோச்சம்
அசோச்சம்
author img

By

Published : Feb 24, 2020, 1:02 PM IST

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு உருவாகியுள்ளது. கொரோனாவின் தாயகமான சீனா உலகப் பொருளாதாரச் சந்தையின் முக்கிய சக்தி என்பதால் உலகளில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான சீனா, இந்திய வர்த்தகத்தில் மாபெரும் பங்களிப்பை கொண்டுள்ளது. குறிப்பாக இந்திய மருத்துவத்துறை சீனாவை பெரிதும் நம்பியுள்ளது. கொரானாவின் பாதிப்பு தொடரும் நிலையில் அடுத்த மாதத்தில் இந்திய மருத்துவச்சந்தை பெரும் பாதிப்பை சந்திக்கும் என ஐயம் உருவானது.

இந்நிலையில், இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தீபக் சூத் நேற்று (பிப். 23) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய அரசும் தொழிற்துறையும் கொரோனாவின் தாக்கத்தை கூர்மையாகக் கவனித்துவருகிறது. இந்தத் தற்காலிக சிக்கலை சமாளிக்கும் திறன் இந்திய சந்தைக்கும் தொழிற்துறைக்கும் உள்ளது என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மேலும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை தொடர்ந்து 'அசெம்பில் இந்தியா' திட்டத்தை இந்திய அரசு கொண்டுவர முனைந்துள்ளது நாட்டின் தொழிற்துறையில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என நம்புவதாக தீபக் சூத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.