வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என பலர் பேர் கூறுகையில், 2019 டிசம்பரில் சுமார் 12.67 லட்சம் பேருக்கு புதிய வேலை வழங்கப்பட்டுள்ளது என ஊழியர் தேசிய காப்பீட்டுக் கழகத்தின் இ.எஸ்.ஐ.சி(ESIC) தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் மாதத்தில் 14.59 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.
தேசிய புள்ளி விவர அலுவலகம் என்எஸ்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பதிவு செய்யப்பட்ட புதிய இஎஸ்ஐசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2018-19 நிதியாண்டு முழுவதும் 1.49 கோடி ஆகும்.
செப்டம்பர் 2017 முதல் டிசம்பர் 2019 வரை சுமார் 3.50 கோடி புதிய சந்தாதாரர்கள் ESIC திட்டத்தில் இணைந்தனர் என்றும் அறிக்கை காட்டுகிறது. ESIC, ஓய்வூதிய நிதி நிறுவனம் EPFO மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஆகியவற்றால் இயக்கப்படும் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களின் புதிய உறுப்பினர்களுக்கான சம்பள தரவுகளின் அடிப்படையில் என்எஸ்ஓ அறிக்கை அமைந்துள்ளது.
2018-19 ஆம் ஆண்டில், 611.2 மில்லியன் புதிய சந்தாதாரர்கள் ஆன்லைன் அடிப்படையில் EPFO- இயக்கப்படும் சமூக பாதுகாப்பு அமைப்பில் சேர்ந்தனர். மேலும், செப்டம்பர் 2017 முதல் டிசம்பர் 2019 வரை, சுமார் 3.12 புதிய உறுப்பினர்கள் பணியாளர் நிதியளிக்கப்பட்ட நிதி திட்டத்தில்(Employees' Provident Fund Scheme) சேர்ந்துள்ளனர் என என்எஸ்ஓ அறிக்கை தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து இந்த அறிக்கை முறையான துறையில் வேலைவாய்ப்பு நிலைகள் குறித்து வேறுபட்ட கண்ணோட்டத்தை அளித்ததாகவும், ஒட்டுமொத்த அளவில் வேலைவாய்ப்பை அளவிடவில்லை என்றும் என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சரிந்தது தங்கம் விலை!