நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு வேளாண் பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்து அதனை நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் தலைமை தபால் நிலையம் அருகே சாலையில் நாற்று நாடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதா விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. உடனடியாக மத்திய அரசை இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.