திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ரவிச்சந்திரன்(25). இவருக்கும் இவரது உறவினர் மகள் பதினேழு வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி சிறுமியை ரவிச்சந்திரன் பாலியல் வன்புணர்வு செய்ததால் சிறுமி கருவுற்றுள்ளார். இதையறிந்த உறவினர்கள் கடந்த 15ஆம் தேதி முன்பு இருவருக்கும் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,இளைஞர் ரவிச்சந்திரன், அவரது பெற்றோர் சிறுமியை சரிவர கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இளைஞர் திருமண செய்துகொள்வதாக சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி சிறுமியை கர்ப்பமாகியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் ரவிச்சந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சட்டத்திற்கு புறம்பாக 17 வயது சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்ததாக இரு வீட்டினர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவி விஷமருந்தி தற்கொலை: காதலனை தேடும் காவல்துறை