கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர், தங்களது 16 வயது சிறுமியை காணவில்லை என்று ஜூன் 28ஆம் தேதி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமியும் இடையர்ப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷாத் என்ற இளைஞரும்(20) இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தது கண்பிடிக்கப்பட்டது.
மேலும் அந்த இளைஞர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி அழைத்து சென்று அவரது நண்பரின் வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இளைஞரின் நண்பர் வீட்டிற்குச் சென்ற காவல் துறையினர், சிறுமியை மீட்டனர். பின்னர், ஹர்ஷாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறைப் பணியாளருக்கு கரோனா தொற்று - கைதிகள் திருச்சி சிறைக்கு மாற்றம்