மயிலாடுதுறை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் உலக ஓசோன் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார்.
மேலும் இதில் மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், கோட்டாட்சியர் மகாராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு ஓசோன் குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டுப்பிரதிகள் விநியோகிக்கப்பட்டன.