உலகின் மிகப்பெரிய பாசனத் திட்டம் எனச் சொல்லப்படும் காலேஷ்வரம் பாசனத் திட்டமானது நாளை (ஜூன் 21) தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பல மாநிலத் தலைவர்கள் முன்னிலையில் திறந்துவைக்கிறார்.
80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாசனத் திட்டமானது, 45 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும் என்று கூறப்படுகிறது. மேலும், இம்மாநிலத்தின் 75 விழுக்காடு குடிநீர்த் தேவையை இது பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.
இந்தத் திட்டமானது 1,832 கி.மீ. நீர்வழிப் பாதையை உருவாக்கி, 203 கி.மீ. சிறு, குறு மாற்றுப்பாதை வடிகால்கள் மூலம் இதன் பாதை நிறுவப்பட்டிருக்கிறது. இதன் மொத்தக் கொள்ளளவாக 141 டி.எம்.சி. இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் இரண்டு டி.எம்.சி. நீர் வெளியேற்ற 4,992 மெகா வாட் மின்சாரம் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.