ETV Bharat / briefs

தினந்தோறும் 10 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்- உலக சுகாதார மையம்

சென்னை: கரோனாவை கட்டுக்குள் கொண்டுவர நாளொன்றுக்கு 10 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.

தினந்தோறும் 10 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்- உலக சுகாதார மையம்
தினந்தோறும் 10 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்- உலக சுகாதார மையம்
author img

By

Published : Jul 16, 2020, 12:12 AM IST

கரோனா பரவலை கருத்தில் கொண்டு பொது சுகாதாரம் மற்றும் சமுதாய நடவடிக்கைகளுக்கு ஏற்ப பொது சுகாதார அளவுகோலை சரி செய்தல் என்ற தலைப்பிலான நெறிமுறை அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், கரோனா தொற்றைக் கண்காணிப்பது மற்றும் பரிசோதிப்பது தொடர்பாக விளக்கும்போது, 10 லட்சம் மக்கள் தொகைக்கு நாளொன்றுக்கு 140 பரிசோதனைகளை, ஒரு நாடு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள எண்ணிக்கைக்கும் அதிகமான பரிசோதனைகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது. இந்தியாவில் மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அரசு ஆய்வகங்கள் 865, தனியார் ஆய்வகங்கள் 358 என மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 1223 ஆக உயர்ந்துள்ளது.

அதன் விவரங்கள்:

உடனடி RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 633 (அரசு: 391 + தனியார்: 242)

TrueNat அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 491 (அரசு: 439 + தனியார்: 52)

CBNAAT அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 99 (அரசு: 35 + தனியார்: 64)

இந்தியாவில் உள்ள ஆய்வகங்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு ஆய்வகமாக இருந்தது, மார்ச் மாதத்தில் 121ஆக அதிகரித்து, 1223 ஆக கூடியுள்ளது.

நாள்தோறும் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மூன்று லட்சத்து 20 ஆயிரத்து 161 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதுவரையில் மொத்தம் ஒரு கோடியே 24 லட்சத்து 12 ஆயிரத்து 664 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஜூலை 14, 2020 அன்று நிலவரப்படி ஒரு நாளில் மட்டும் 3.2 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.