மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த ஜோதி. இவர் ஓதவந்தான்குடி அரசு பள்ளி தலைமையாசியராக உள்ளார்.
இவரின் மனைவி சித்ரா (40). இவர் இன்று (செப்டம்பர் 18) காலை வீட்டின் வாசலில் கோலம் போடுவதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சித்ரா தலையில் பலமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.
பலத்த காயமடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி காவல் துறையினர் சித்ராவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நகை பறிப்பிற்காக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது முன்விரோதம் உள்ளதா? என நேரில் விசாரணை மேற்கொண்டார்.