இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் வெய்ன் ரூனி, இங்கிலாந்து, மான்செஸ்டர் யுனைடெட் கிளப் ஆகிய இரு அணிகளுக்கும் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 33 வயதான இவர், 2018இல் இங்கிலிஷ் ப்ரீமியர் கால்பந்து தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் சாக்கர் கால்பந்து தொடரில் டி.சி. யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
பந்தை கன்ட்ரோல் செய்வது, வியக்க வைக்கும் வகையில் கோல் அடிப்பது என தனது திறமையை இங்கிலாந்து, யூரோ பகுதிகளில் வெளிப்படுத்திய இவர், தற்போது அமெரிக்காவிலும் அசத்தி வருகிறார். நேற்றைய மேஜர் சாக்கர் லீக் போட்டியில் டி.சி. யுனைடெட் - ஒர்லான்டோ ஜெர்சி அணிகள் மோதின.
இதில், 9ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் பகுதியில் இருந்து பந்து அந்த அணியின் டிஃபெண்டர்ஸ்களை நோக்கி வந்தது.பின் அவர்களது அலட்சியத்தால், ரூனியிடம் வந்த பந்தை, அவர் எந்த ஒரு டச் எடுக்காமல் மைதானத்தின் பாதி பகுதியில் இருந்து 68 யார்ட் தூரத்திற்கு தனது வலது காலில் அடித்த ஷாட் நேரடியாக கோலுக்கு சென்றது. ஒர்லான்டோ ஜெர்சி அணியின் கோல்கீப்பரலும் ரூனியின் மிரட்டலான கோலை தடுக்க முடியாமல் போனது.
ரூனியின் இந்த மேஜிக் கோல் உதவியால் டி.சி. யுனெடட் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றது.தனது மிரட்டலான கோலால் பலமுறை இணையதளத்தை கலக்கிவந்த இவர், தற்போது மீண்டும் ஒருமுறை தனது மேஜிக் கோலால் இணையதளத்தை ஆட்கொண்டு வருகிறார்.