கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதற்கிடையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது தந்தைக்கு முடி வெட்டிவிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில், "அப்பாவின் முடியை ஸ்டைலிஸ்ட்டாக மாற்றிவிட்டேன். எல்லா வேலையும் மிகவும் சுலபம் என்பது போல தெரியும், அதை நீங்களே செய்யும்வரை" என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்த சாந்தனு, "மச்சான் எனக்கு தற்போது மிகவும் அவசியமாக ஒரு கட் தேவைப்படுகிறது. தயவுசெய்து உதவி செய்" என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் கூறிய விஷ்ணு விஷால் "ஹாஹா... மச்சி எப்போ வேணும்னாலும் ரெடி... உன் பொண்டாட்டி கிகி இடம் பர்மிஷன் வாங்கி விடு" எனக் கூறியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த சாந்தனு, "இதுக்கு எதுக்கு பர்மிஷன்? நான் கட் தானே கேட்டேன் கட்டிங் இல்லையே" என்று தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த நகைச்சுவையான பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.