நடிகர் வருண் தவானின் தாயார், நேற்று(ஜூலை 12) தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி வருண், அவருக்கு கேக் வெட்டி பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்து, அந்த காணொலியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா. உலகிலேயே மிகவும் வலிமையான தாய்" என்று குறிப்பிட்டுள்ளார். வருணின் இந்தப் பதிவை பார்த்த பலரும் அவரின் தாய்க்கு வாழ்த்து கூறியுள்ளனர்.
வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள "கூலி நம்பர் 1" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.