ETV Bharat / briefs

தென் மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

சென்னை: மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain in the Southern Districts
Rain in the Southern Districts
author img

By

Published : Apr 22, 2021, 1:31 PM IST

தென் தமிழ்நாடு, அதனை ஒட்டிய பகுதிகளில் (1.5 கிலோமீட்டர் உயரம்வரை ) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஏப்ரல் 22, 23, 24, 25 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியகுமாரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள், புதுசசேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால், பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர், நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும், வெள்ளை மற்றும் வெளிறிய வண்ண (light colour) கதர் ஆடைகளை அணிவது சிறந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம் 4 செ.மீ., சித்தார் 3 செ.மீ., குழித்துறை 1 செ.மீ. மழையும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2செ.மீ. மழையும் பதிவாகிவுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
இதையும் படிங்க: அம்பத்தூரில் பணப்பட்டுவாடா: அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.