ETV Bharat / briefs

அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இருவர் உயிரிழப்பு!

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வந்த இருவர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தனர்.

Two Mysterious Dead In Mayiladurai
Two Mysterious Dead In Mayiladurai
author img

By

Published : Aug 14, 2020, 9:00 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த உளுத்துக்குப்பை கிராமத்தைச் சேர்ந்த 58 வயது பெண்மணிக்கு உடல்நிலை சரியில்லை என்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு பொது வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதேபோல், மயிலாடுதுறை கீழபட்டமங்கலத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவிற்காக காத்திருந்திருந்தனர்.

இந்நிலையில், இருவரும் மூச்சுத் திணறல் காரணமாக இன்று (ஆகஸ்ட் 14) உயிரிழந்தனர். இரண்டு இறப்புகளிலும் கரோனா முடிவு வராமல் இருப்பதால் சுகாதாரத் துறையினர் உடனடியாக பொது வார்டுக்கு விரைந்து அவர்களது உடல் வைக்கப்பட்டிருந்த இடம் மற்றும் சிகிச்சைப் பெற்ற இடம் போன்றவற்றில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

அவர்களது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சுகாதார முறைப்படி அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இரண்டு தரப்பு உறவினர்களும் ஒத்துக்கொண்டுவிட்டதால் சுகாதார அலுவலர்கள், இருவரது உடலையும் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.