ETV Bharat / briefs

பெரம்பலூரில் பணமோசடி செய்த வழக்கில் இருவர் கைது! - பெரம்பலூர் பணமோசடி வழக்கு

பெரம்பலூர்: தங்க நகை வாங்கித் தருவதாக 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Two arrested in Perambalur money Cheating case

author img

By

Published : Jul 7, 2020, 4:11 PM IST

பெரம்பலூர் ரோஸ் நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் ரியல் எஸ்டேட், ஆன்லைன் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர்களான அன்னமங்கலம் எலிசபெத் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் நிக்கல்சன், பிம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த சுஜாதா, பாப்பாங்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய மூவரும் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ரவிச்சந்திரனிடம் ஒரு கிலோ தங்க நகை ரூபாய் 43 லட்சத்திற்கு விற்கப்படுவதாகவும் திருச்சியில் உள்ள உயர் அலுலர்களிடம் அதிக அளவில் நகைகள் உள்ளதாகவும் ரூபாய் 38 லட்சத்திற்கு வாங்கி தருவதாகவும் கூறியுள்ளனர்.

இவர்கள் கூறியதை நம்பிய ரவிச்சந்திரன் முன்பணமாக 18 லட்சம் ரூபாய் ரொக்கமும், இரண்டு லட்சம் ரூபாயை சுரேஷ் வங்கி கணக்கிலும் செலுத்தியுள்ளார். இதனிடையே, கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி சுரேஷ் ரவிச்சந்திரனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கொடுத்த பணத்தில் இரண்டு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு உள்ளதால், இரண்டு லட்சம் ரூபாயை தங்களது வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் இரண்டு லட்சம் ரூபாயை சுரேஷ் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார் பின்னர் மீதமுள்ள 32 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டுமென சுரேஷ் கூறியுள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த ரவிச்சந்திரன் பணம் தர முடியாது எனக் கூறி கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ரவிச்சந்திரன் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் ஆய்வாளர் சுப்பையா வழக்குப்பதிந்து சுரேஷ், நிக்கல்சன் ஆகியோரை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள சுஜாதா என்ற பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நிதி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வங்கி சிஇஓ சந்தேக மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.