கறுப்பு வெள்ளை என இரு நிறத்தில் உள்ள குழந்தைகளின் நட்பைப் பாராட்டும் விதமாக தனியார் செய்தி நிறுவனம் 2019ஆம் ஆண்டில் ஒரு காணொலி தொகுப்பை தயார் செய்திருந்தது.
அதனை திருத்தி வேறு விதமாக சித்தரிக்கும் வகையில் காணொலி ஒன்று சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. அதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டிவீட் செய்திருந்தார்.
அதில், அந்த ஊடகத்தின் மீது ட்ரம்ப் பழி சுமத்தும் வகையில் இருந்தது. இதுகுறித்து ட்விட்டரிடம் முறையிட்ட செய்தி நிறுவனம், அந்த பதிவு பொய்யான தகவல்களை கொண்டுள்ளது என்ற விளக்கத்தை அளித்தது.
இதனையடுத்து அதுகுறித்து விசாரணை செய்து ட்ரம்ப்பின் பதிவுக்கு சிவப்பு கொடியிட்டு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.