அமெரிக்காவில் கரோனா பாதிப்பு மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் 74ஆவது பிறந்தாள் நாள் அவரது ஆதரவாளர்களால் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
அங்குள்ள தெற்கு கரோலினா ஏரியில் படகுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் கலந்துகொண்டு தண்ணீரில் சீறிப் பாய்ந்து சென்ற காட்சி, பார்ப்பவர்களிடையே சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் இருந்தது.
அதில் அமெரிக்கா கொடியினையும், அதிபர் ட்ரம்ப் பெயர் எழுதிய கொடியினையும் அவரது ஆதரவாளர்கள் பறக்கவிட்டு ட்ரம்ப்புடைய பிறந்தநாளைக் கொண்டினர். மேலும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கில் அதிபரின் பிறந்தநாள் விழாவினை கொண்டாடியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.