ஈரான் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் நிலவிவருகிறது.
இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறும் வகையில் 300 கிலோவுக்கும் அதிகமாக யுரேனியத்தை ஈரான் சேமித்துள்ளதாக, அந்நாட்டு அரசு ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் என்ன செய்கிறது என்று நாட்டுக்கு தெரியும், அவர்கள் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேலும், ஈரானிய தலைவர்கள் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், அந்நாட்டின் மீதான தங்களது அழுத்தம் தொடர்ந்து நீடிக்கும் என்று எச்சரித்த ட்ரம்ப், " அணு ஆயுத லட்சியத்தை அந்நாட்டு கைவிட வேண்டும்" என வலியுறுத்தினார்.