ETV Bharat / briefs

தனிமைப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்துங்கள்! - Treat Covid-19 patients with humanity

சென்னை : கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டு தனிமைப்படுத்துபவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் முஹம்மது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Treat  Covid-19 patients with humanity TNTJ Request

author img

By

Published : Jun 20, 2020, 7:35 PM IST

இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பேரிடரில் அர்பணிப்புடன் மருத்துவர்களும் சுகாதாரத்துறையினரும் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் போற்றுதலுக்கு உரியது. ஆனால், இதில் சிலர் மனிதநேயமற்று நடந்து கொள்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து தாயகம் வருபவர்களையும், வெளி மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் எடுத்து வருபவர்களையும் அரசு தனிமை முகாம்களில் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையின் சார்பில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

உண்மையில் தனிமை முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? என்பதை அண்மையில் நடைபெற்ற சில சம்பவங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சரியான முறையில் நடத்தப்படுகிறார்களா? அல்லது அவர்களை சிறைக் கைதிகளைப் போல நடத்துகிறார்களா? என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சத்தான உணவுகளை வழங்குவதாக சுகாதாரத்துறை சொல்கின்றது. ஆனால், முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் முறை, உணவுகளின் தரம் குறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி மற்றும் காணொலிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிமை முகாம்களின் வாசலில் உணவுப் பொட்டலங்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் குப்பைகளைப் போல கொட்டி விட்டுச் செல்கின்றார்கள். தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு பசிக்கும் போது அவர்கள் அங்கே வந்து அந்த உணவுகளை எடுத்து சாப்பிடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தனிமை முகாம்களில் சிகிச்சை பெற்று வருபவர்களை கரோனா நோயாளிகளைப் போல ஊழியர்கள் நடத்தி வருகின்றார்கள்.

அண்மையில், காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் கூத்தாநூல்லூரைச் சேர்ந்த முகமது ஷரிப் என்ற முதியவர், மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனிமை முகாமில் அடைக்கப்பட்ட முதியவர் முகமது ஷரீப், கரோனா வைரஸால் உயிரிழக்கவில்லை! மாறாக அவர் மேற்கொள்ளும் வழக்கமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காமலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.

கரோனா தொற்று உள்ளவர்கள் அல்லது தனிமைப் படுத்தப்பட்டவர்களை முதலில் மனரீதியாக பலப்படுத்துவதே அவர்களுக்கு வழங்கப்படும் முதல் நிவாரணம் ஆகும். சமீபத்தில் புதுக்கோட்டை தனிமை முகாமில் கரோனா தொற்று நோயாளி மனரீதியாக பலமிழந்து தற்கொலை செய்துகொண்டார். தமிழ்நாடு அரசும், சுகாதாரத் துறையும் இதுபோன்ற சம்பவங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முகாம்களில் தனிமைப் படுத்தப்படுபவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகின்றது. இதுபோன்ற இரக்கமற்ற சம்பவங்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.