ETV Bharat / briefs

வாங்க கார் வாங்கலாம்... அதிரடி ஆஃபர்களை அறிவித்த டொயோட்டா - டொயோட்டா நிறுவனம்

டெல்லி: வாடிக்கையாளர்களை கவர சிறப்பு சலுகையாக அதிரடி ஆஃபர்களை டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டொயோட்டா
டொயோட்டா
author img

By

Published : Jun 13, 2020, 5:18 PM IST

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் (டி.கே.எம்) சிறப்பு நிதி திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, நெருக்கடியான காலக்கட்டங்களில் சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக, இந்த மாதத்தில் செய்யப்பட்ட அனைத்து பிஎஸ்-6 வாகனங்களுக்கும், முதல் 90 நாள்கள் வரை மாதத் தவணை செலுத்த வேண்டாம் என டொயோட்டா நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. வாகன விற்பனை அங்காடிகளில் வாடிக்கையாளர்களின் வருகையை உறுதிசெய்ய இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

அனைத்து மாடல்களான இன்னோவா கிரிஸ்டா, பார்ச்சூனர், கேம்ரி ஹைபிரிட், யாரிஸ் மற்றும் கிளான்ஸா ஆகிய வாகனம் வாங்குபவர்களுக்கு முன்கட்டணம் எதுவும் கிடையாது. கூடுதலாக, டொயோட்டா மாடல்களில், முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு லட்சத்திற்கு ரூ.899 என்ற குறைந்த மாதத் தவணை திட்டத்தினையும் டொயோட்டா அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில், வாகனம் வாங்க விரும்புவோருக்கு நாங்கள் அளிக்கவிருக்கும் சலுகைகள் உதவிகரமாக இருக்கும் என்று நம்புவதாக நிறுவனத்தின் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதல பாதாளத்தில் ஆட்டோமொபைல் துறை - 87% விற்பனை சரிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.