திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேவருகிறது. இதில் காலை ஏழு மணி நிலவரப்படி மாவட்டத்தில் 60 பேர் கரோனா பாதிப்புக்குள்ளானது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400-ஆக அதிகரித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்த காவலர்கள், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் என ஒரேநாளில் இதுவரை 60 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுவரை மாவட்டம் முழுவதும் 114 பேர் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.