ETV Bharat / briefs

சேலத்தில் இன்று 168 பேருக்கு கரோனா: 6 பேர் உயிரிழப்பு! - Salem Corana Deaths

சேலம்: இன்று ஒரே‌நாளில் 168 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Today 168 Corona Positive cases In Salem

author img

By

Published : Aug 7, 2020, 11:24 PM IST

சேலம் மாவட்டத்தில், கரோனோ பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் கரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டும் என்று சுகாதாரத்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி பகுதியில் 130 பேரும், தாரமங்கலம் 7, ஓமலூர் 5, மேச்சேரி 4, எடப்பாடி 3, கொங்கணாபுரம் 1, வீரபாண்டி 1, நங்கவள்ளி1, ஆத்தூர் 6, பேளூர் 2, பெத்தநாயக்கன்பாளையம் 1, அயோத்தியாப்பட்டணம் 1, பனமரத்துப்பட்டி 1 என மாவட்டத்தில் 164 பேருக்கு கரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களான நாமக்கல், திருப்பூரை சேர்ந்த தலா ஒருவருக்கும், பிறமாநிலமான பிகாரைச் சேர்ந்த இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயதுமிக்க நபரும், 72 வயது முதியவரும், 49 வயதுமிக்க நபரும், 60 வயது நபரும், 75 வயது முதியவரும், 48 வயதுமிக்க நபரும் என 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 202 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 1169 பேர் சேலம் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.