ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலுருந்து சென்னைக்கு போதை பொருள்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து மாதாவரம் ரோவ்ண்டானாவில் காவல் துறை நடத்திய தீவிர வாகன சோதனையில் இரு சக்கர வாகனம் ஒன்றிலும், லாரி ஒன்றிலும் போதை பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் 105 கிலோ போதை பொருள்கள் விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சென்னையை சேர்ந்த பிரின்ஸ் ஆண்டனி, ஜோஷுவா, கார்த்திக், தமிழரசன் மற்றும் வசந்தகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவல் துறை வாகனங்களை பறிமுதல் செய்ததோடு குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.