ETV Bharat / briefs

வங்கி கடன் பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்! - Perambalur Collector press release

பெரம்பலூர்: சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் வங்கிக் கடனுதவி மூலம் தொழில் தொடங்கிட தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Those belonging to the minority class can apply for a bank loan

author img

By

Published : Sep 16, 2020, 1:31 AM IST

சிறுபான்மையினர் (இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த, ஜெயின் பார்சி) வகுப்பினைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.

இக்கழகத்தின் கீழ் தனிநபர் தொழில் தொடங்க கடன் உதவி ரூ. 50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரையிலும் சுய உதவிக் குழுக்களுக்கான சிறு கடன் திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூபாய் ஒரு லட்சம் முதல் 6 லட்சம் வரையிலும் கல்விக் கடன் திட்டத்தில் சிறுபான்மையின மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுகலை தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் குறுகிய கால உயர் திறன் வளர்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு அதிகபட்சம் ரூபாய் ஒன்பது லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆவின் நிறுவனத்தின் மூலமாக இரண்டு கறவை மாடுகள் வாங்கிட ரூபாய் 70 ஆயிரம்வரை மற்றும் ஆட்டோ கடன் திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கிட தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ தாய்கோ வங்கி மூலம் வழங்கப்படுகிறது.

மேற்படி கடன் திட்டங்கள் அனைத்தும் சிறுபான்மையினர் வகுப்பினர் வாழ்ந்தவர்களுக்கு நிபந்தனைக்குள்பட்ட குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்படி டாம்கோ கடன் திட்டங்கள் குறித்து வரும் 18ஆம் தேதி அன்று பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் செப்டம்பர் 22ஆம் தேதியும் வேப்பந்தட்டை வட்டத்தில் அரும்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் 24ஆம் தேதியும் குன்னம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் செப்டம்பர் 29ஆம் தேதியும் களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திலும் கடன் மேளா நடைபெற உள்ளது.

மேற்படி கடன் விழாவில் கலந்துகொண்டு கடன் திட்டங்களில் கடன் உதவிகளை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.