ETV Bharat / briefs

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீடு வழக்கு ஒத்திவைப்பு - டெல்லி உச்சநீதிமன்றம்

சென்னை: மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு கோரி தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Medical studies reservation case
Medical studies reservation case
author img

By

Published : Jun 22, 2020, 3:14 PM IST

மருத்துவப் படிப்பில் இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக்கோரி அதிமுக, திமுக, மதிமுக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி இருவரும் இந்த மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இது குறித்து மத்திய அரசு சார்பில், "இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மருத்துவப் படிப்புகளில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை கடைப்பிடிக்க அனுமதிக்கலாம், ஆனால் அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 விழுக்காடு மிகாமல் இருக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் அதே நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது, பின்னர் மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞர் ராஜகோபால் கூறுகையில், 27 விழுக்காடு இடஒதுக்கீடு கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால் இந்த வழக்குகளைத் தள்ளிவைக்க வேண்டும். எனக் கேட்டுக்கொண்டார்.

அப்போது திமுக சார்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞர் பி. வில்சன் தெரிவிக்கையில், உச்ச நீதின்ற வழக்கிற்கும், இந்த வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேலும் நீட் தேர்வு இல்லாதபோது தொடரப்பட்ட வழக்கு என்பதால் இதனை மற்ற வழக்குகளோடு தொடர்புப்படுத்த முடியாது எனக் கூறினார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.