ETV Bharat / briefs

சார்ஜாவில் இருந்து வந்த தமிழர்கள் - சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு! - கோவிட்-19

தேனி: சார்ஜாவில் இருந்து திரும்பிய 150 புலம்பெயர் தமிழர்கள் தமிழ்நாடு – கேரள எல்லையான குமுளியில் இருந்து, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Sharjah Tamil workers
Sharjah Tamil workers
author img

By

Published : Jun 29, 2020, 9:11 PM IST

உலகையே அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் நோய்ப் பரவல், இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை, ரயில், பேருந்துப் போக்குரவத்தும் தடை செய்யப்பட்டன. இதன் காரணமாக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்தவர்கள் தாயகம் திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர் திரும்புவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து அனுப்பி வைத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா நகரில் வேலை செய்து வந்த தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு விண்ணப்பித்திருந்தனர்.

அதனடிப்படையில் மத்திய வெளியுறவுத்துறை, தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் அவர்கள் சொந்த ஊர் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சார்ஜாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் விமான நிலையம் அழைத்து வரப்பட்ட 150 பேர் நேற்று (ஜூன் 28) தமிழ்நாடு – கேரள எல்லையான இடுக்கி மாவட்டம், குமுளி சோதனைச் சாவடியில் தமிழ்நாடு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. சம்பந்தப்பட்டவர்களின் மாவட்ட ஆட்சியருக்கு தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தொடர்பு கொண்டு, அவர்களுக்கான கரோனா பரிசோதனை, தனிமைப்படுத்த தங்கும் வசதி உள்ளிட்டவைகள் குறித்து உறுதி செய்தார்.

அதன்பின்னர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 78 பேர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 39 பேர், என மொத்தம் 117 பேர் நேற்று ( ஜூன் 28) தங்க வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை(2), கடலூர்(7), திருச்சி(2), தென்காசி(3), பெரம்பலூர் (5), தஞ்சாவூர் (2), மயிலாடுதுறை(3), திருவண்ணாமலை(2), கள்ளக்குறிச்சி(4), வேலூர் (1), தூத்துக்குடி(1) பகுதிகளைச் சேர்ந்த 32 நபர்கள் இன்று (ஜூன் 29) அனுப்பி வைக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.