கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து காவல் துறையினர் அவர்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
அதன்படி ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து கடந்த 74 நாள்களில் தடையை மீறியதாக 5 லட்சத்து 89 ஆயிரத்து 794 பேரை பேர் கைதுசெய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
4 லட்சத்து 50 ஆயிரத்து 479 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 10 கோடியே 44 லட்சத்து 74 ஆயிரத்து 254 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.