ETV Bharat / briefs

வட்டம், வட்டம் சாரா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தொட்டிகள் அமைக்கப்படும்! - ஆக்ஸிஜன் தொட்டிகள் அமைக்க அரசு உத்தரவு

சென்னை : தமிழ்நாடு முழுவதுமுள்ள வட்டம், வட்டம் சாரா மருத்துவமனைகளில் கூடுதலாக ஆக்ஸிஜன் தொட்டிகள் அமைக்கப்படுமென தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

வட்டம், வட்டம் சாரா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தொட்டிகள் அமைக்கப்படும்!

author img

By

Published : Jul 25, 2020, 12:40 AM IST

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவிலேயே பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் மருத்துவ பரிசோதனைகளை செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த வைரஸ் நோயில் இருந்து தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 40 ஆயிரம் பேரை எவ்வித மருந்தும் இல்லாமல், ஊசியும் இல்லாமல் குணப்படுத்தியுள்ளோம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், பாதிப்படைந்தவர்களை குணப்படுத்தியும், பாதிப்படைந்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் அவர்களை தனிமைப்படுத்தியும், நோய் எப்படி வந்தது என கண்டறியும் பணியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் குழாய்கள் அமைப்பதற்கு ரூ.75.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணை பிறப்பித்தார். இதன் தொடர்ச்சியாக கரோனா தடுப்பு மற்றும் மேலாண்மை பணிக்களுக்காக தற்போது கூடுதலாக ரூ.76.50 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதாக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிதி ஒதுக்கீடு பொது சுகாதாரத் துறையால் கரோனா தடுப்பு நடவடிகக்கைகளுக்கும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தால் தமிழ்நாடு முழுவதும் வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதிகளை மேம்படுத்தவும், மருத்துவமனை கட்டிடங்கள் மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும்.

மருத்துவக்கல்வி இயக்குநரகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலமாக உயர் வெற்றிட வெளியேற்ற அமைப்பை நிறுவிடவும் ஆக்ஸிஜன் தொட்டிகளை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படும்.

உயர் வெற்றிட வெளியேற்ற அமைப்பானது, மருத்துவமனைகளில் தீநுண் கிருமிகளை நீக்கி தூய்மையான காற்றோட்ட வசதியை ஏற்படுத்திட உதவுகிறது. பொதுவாக, ஆக்ஸிஜன் வாயுநிலையில் சிலிண்டர்களில் சேமித்துவைக்கப்பட்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும். ஆனால் ஆக்ஸிஜன் தொட்டிகளில் சேமித்து வைக்கப்படும் ஒவ்வொரு கிலோ லிட்டர் திரவநிலை ஆக்ஸிஜன் 835 கியூபிக் மீட்டர் வாயுநிலை ஆக்ஸிஜனாக மாறக்கூடிய தன்மை வாய்ந்தது. இதனால், எவ்வித தங்கு தடையுமின்றி தேவைப்படும் அளவிற்கு கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கி விலைமதிப்பற்ற உயிர்கள் தமிழகம் முழுவதும் காக்கப்படுகிறது. இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் இதுவரை கரோனா வைரஸால் 1 லட்சத்து 92 ஆயிரத்து 964 பேர் பாதிக்கப்பட்டும், 3 ஆயிரத்து 232 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும், 1 லட்சத்து 36 ஆயிரத்து 793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.