ETV Bharat / briefs

நெடுஞ்சாலையில் விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு - National Highway

மதுரை: தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த ஒன்பது பேருக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும், பலத்த காயம் அடைந்தவருக்கு ஐம்பதாயிரம், லேசான காயமடைந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Tamil Nadu government has announced that it will provide relief to the victims of the highway accident

author img

By

Published : Jul 16, 2020, 9:20 PM IST

மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த ஒன்பது பேருக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம், பாதிரி கிராமம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று(ஜூலை 16) காலை திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை கிராமத்திலிருந்து, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், வாகனத்தில் பயணம் செய்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், முருகராஜ், ஸ்ரீமுருகன், மலர், செல்விமுத்து அனிஷா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகிய ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், வடக்காட்டுப்பட்டி கிராமம், திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வடகாட்டுப்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மிதுன்கிஷோர், அரவிந்த், பரத் ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்திகளை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட சாலை விபத்துகளில் உயிரிழந்த ஒன்பது நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சாலை விபத்துகள் குறித்து அறிந்தவுடன், இந்த விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திந்து ஆறுதல் கூறவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டேன்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரு சிறுவன், ஒரு சிறுமி காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் இரண்டு பேரும் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன். மேற்கண்ட சாலை விபத்துகளில் உயிரிழந்த ஒன்பது நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விவசாய நிலத்தில் கிடைத்த அம்மன் உலோக சிலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.