தோனியின் சுயசரிதைப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் நேற்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து சுஷாந்த் சிங்கின் உடல் மும்பையில் உள்ள கூபர் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் உடற்கூறு ஆய்வு முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
அவர் ஆறு மாதமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக மருத்துவரை அணுகவில்லை என்று காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சுஷாந்த் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவரது நெருங்கிய நண்பர் ரேகா சக்கரபதி மற்றும் மகேஷ் ஷெட்டிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் அந்த அழைப்பை ஏற்கவில்லை. இருப்பினும் காவல்துறையினர் அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.