ETV Bharat / briefs

இணையவழி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் - ராமதாஸ் - ராமதாஸ் அறிக்கை

தமிழ்நாட்டில் இணைய வகுப்புகள் என்பவை புதிய நாகரிகமாக மாறி வருகின்றன. மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் வகையில் உள்ள அதை தடை செய்யவேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Ramdoss
Ramdoss
author img

By

Published : Jun 7, 2020, 10:40 PM IST

சென்னை: மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் இணையவழி வகுப்புகளை தடை செய்யவேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 7) வெளியிட்டுள்ள அறிக்கையில்;

"தமிழ்நாட்டில் இணைய வகுப்புகள் என்பவை புதிய நாகரிகமாக மாறி வருகின்றன. வகுப்பறைக் கல்வி முறைக்கு எந்த வகையிலும் ஈடாக முடியாத இணையவழி கல்வி முறை தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் பணம் பறிக்கும் புதிய உத்தியாக மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆக்கப்பூர்வமாக பயனளிக்காத இந்த முறையை பள்ளிக் கல்வித் துறை ஊக்குவிப்பது வருத்தமளிக்கிறது.

நகர்ப்புற, பணக்கார மாணவர்களுக்கு ஏற்கனவே தனிப்பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ளன. அத்துடன் இப்போது நகர்ப்புற தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளும் கிடைக்கின்றன. இவை எதுவுமே கிராமப்புற, அரசுப் பள்ளியின் மாணவர்களுக்கு கிடைக்காத நிலையில் இரு தரப்பினரும் ஒரே தேர்வை எழுதினால், நகர்ப்புற, பணக்கார மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள்; கிராமப்புற மாணவர்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களை பெறுவார்கள். இது எந்த வகையில் சம நீதியாகவும், சமூக நீதியாகவும் இருக்கும்?

இதற்கெல்லாம் மேலாக இணையவழி வகுப்பு எனப்படுபவை கேலிக்கூத்தாக மாற்றப்பட்டு வருகின்றன. பல பள்ளிகளில் மழலையர் வகுப்புகளுக்குக் கூட இணையவழி வகுப்புகள் நடத்தப்படுவதே இதற்கு சாட்சியாகும். அய்யாவடி வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்துவதன் நோக்கம் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தர வேண்டும் என்பதை விட மாணவர்களின் பெற்றோரிடமிருந்து கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பது தான்.

வகுப்புகளைத் தொடங்காவிட்டால் கட்டணம் செலுத்த மாட்டார்கள் என்பதற்காகவே இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இணைய வழி வகுப்புகள் நடத்தப்படுவதை விட, கல்விக் கட்டணம் செலுத்தாவிட்டால் இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாது என்று கூறி பெற்றோரிடம் பணம் பறிப்பது தான் அதிகமாக நடக்கிறது. கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில், பணம் செலுத்தாத குழந்தைகளை ஆன்லைன் வகுப்புகளில் இருந்து நீக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறிய செய்தியை பகிர்ந்ததற்காக 100 மாணவர்களை பள்ளியிலிருந்து நிர்வாகம் நீக்கியிருக்கிறது. இதை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது.

வகுப்பறைகளில் உயிர்ப்புடன் நடத்தப்படும் பாடங்களில் கிடைக்கும் தெளிவையும், புரிதலையும் இணையவழி வகுப்புகளால் வழங்க முடியாது என்பது தான் உண்மை. இணையவழி வகுப்புகளால் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறது. பள்ளிகள் சில மாதங்கள் தாமதமாக தொடங்கப்படுவதாலோ, தாமதமாகும் காலத்தில் மாணவர்கள் பாடங்களை படிக்காததாலோ எந்த பாதகமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

எனவே, அனைத்து பள்ளிகளிலும் இணைய வழி வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். அதற்கு மாற்றாக, பள்ளிகள் எவ்வளவு தாமதமாக திறக்கப்படுகின்றனவோ, அதற்கு ஏற்ற வகையில் பாடங்களின் அளவை குறைக்க தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.