ETV Bharat / briefs

கோவிட்-19 இறப்புகளை குறைக்கும் ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன்! - கொரோனா மருந்து

இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 2104 கோவிட்-19 நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன் மருந்தை கொடுத்தும், 4,321 பெரும் பாதிப்பு இல்லாத நோயாளிகளுக்கு இம்மருத்தை கொடுக்காமலும் சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில் 35 விழுக்காடு அளவுக்கு மரணத்தில் இருந்து நோயாளிகளை காக்கும் தன்மை இம்மருந்துக்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது.

Steroid dexamethasone
Steroid dexamethasone
author img

By

Published : Jun 16, 2020, 8:27 PM IST

லண்டன்: கோவிட்-19 நோயாளிகளின் இறப்பை ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன் மருந்தின் மூலம் மூன்றில் ஒரு பங்கு கட்டுப்படுத்தலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 2104 கோவிட்-19 நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன் மருந்தை கொடுத்தும், 4,321 பெரும் பாதிப்பு இல்லாத நோயாளிகளுக்கு இம்மருத்தை கொடுக்காமலும் சோதனை செய்து பார்த்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்தவர்கள்.

ஊசி மூலமாகவும், வாய் வழியாகவும் இந்த மருந்தை நோயாளிகளுக்கு கொடுத்துள்ளனர். இதில் நோயாளிகள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கோவிட்-19 எதிரான ஆயுர்வேத மருந்தை உருவாக்கி வரும் இந்தியா!

அபாய கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இம்மருந்து உதவும் என்றாலும், இதன்மூலம் பல விலைமதிப்பிட முடியாத உயிர்களை காப்பாற்ற முடியும் என நிக் கம்மாக் தெரிவித்துள்ளார். நிக் நிர்வகிக்கும் 'வெல்கம்' எனும் இங்கிலாந்து தொண்டு அமைப்பு தான் இந்த ஆராய்ச்சிக்கு உதவி வருகிறது.

டெக்ஸாமெதாசோன் மருந்து உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு கிடைக்கும் வகையில் அடுத்த செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று கூறும் நிக், இம்மருந்து மிகவும் மலிவு, எளிதானது, விரைவாக அளவிட கூடியது என்றார். மேலும், இதன் சிறிய அளவைக் கொண்டே ஒரு நோயாளியை காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

முன்னாதாக கோவிட்-19 நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு பயன்படுத்துவது தவறு என்ற வாதத்தை உலக சுகாதார மையம் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.