ETV Bharat / briefs

IPL ELIMINATOR: டெல்லி பந்துவீச்சு - ஹைதராபாத் - டெல்லி

ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய எலிமினேட்டர் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

IPL ELIMINATOR: டெல்லி பந்துவீச்சு
author img

By

Published : May 8, 2019, 7:20 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச தீர்மானித்தார். டெல்லி அணியில், காலின் இங்கிரமிற்கு பதிலாக, முன்ரோ இடம்பெற்றுள்ளார். மறுமுனையில், ஹைதராபாத் அணியில் யூசுஃப் பதானுக்கு பதிலாக தீபக் ஹுடா சேர்கப்பட்டுள்ளார்.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறும் என்பதால், ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

டெல்லி அணி: பிரித்வி ஷா, ஷிகர் தவான், கோலின் முன்ரோ, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த், ரூதர்ஃபோர்டு, அக்சர் படேல், கீமோ பவுல், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா, டிரெண்ட் போல்ட்

ஹைதராபாத் அணி: கேன் வில்லியம்சன்(கேப்டன்), சஹா, கப்தில், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், முகமது நபி, தீபக் ஹுடா, ரஷித் கான்,புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, பாசில் தாம்பி

Intro:Body:

SRH vs DC eliminator - Toss

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.