ETV Bharat / briefs

உலகக் கோப்பையில் இருந்து விலகிய வேகப்புயல் 'ஸ்டெயின்' - உலகக் கோப்பை

சவுத்ஹாம்டன்: காயம் காரணமாக உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் விலகியுள்ளார்.

உலகக் கோப்பையில் இருந்து விலகிய வேகப்புயல் 'ஸ்டெயின்'
author img

By

Published : Jun 4, 2019, 8:54 PM IST

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்கா அணி மோசமான நிலையில் உள்ளது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடவில்லை.

இதனால், பந்துவீச்சில் பலவீனமான தென்னாப்பிரிக்கா அணி, இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டியில் 300க்கும் மேற்பட்ட ரன்களை வாரி வழங்கியது. இதுமட்டுமின்றி அந்த இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கும் கைகொடுக்காததால், தோல்வியை மட்டுமே சந்தித்து.

இதைத்தொடர்ந்து, சவுத்ஹாம்டன் நகரில் நாளை நடைபெறவுள்ள போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், ஸ்டெயினின் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்கு தரப்பட்ட சிகிச்சை ஒத்துழைக்காததால், அவர் தற்போது தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து, அவருக்கு பதிலாக இடதுகை பந்துவீச்சாளர் பெரன் ஹென்ரிக்ஸ் தென்னாப்பிரிக்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். லூங்கி இங்கிடி, ஆம்லா ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது ஸ்டெயின் விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டெயினுக்கு தோள்பட்டையில் இரண்டாவது முறையாக காயம் ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.